undefined

"ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா?” மீண்டும் சீமான் ஆவேசம்!

 

ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா? என்று சீமான் மீண்டும் ஆவேசமாக நடிகர் விஜய்யை சீண்டியுள்ளார்.

விஜய் கட்சி துவங்கும் முன்பும், துவங்கி பெயரை அறிவித்த போதும் ‘தம்பி’ என்று கூறி வரவேற்ற நாம் தமிழர் சீமான், விஜய் கட்சியின் கொள்கைகளாக தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்று கூறியதில் இருந்து தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.  தமிழ் தேசியமும், திராவிடமும் ஒருபோதும் ஒன்றாக முடியாது என்று தொடர்ந்து சீமான் எதிர்த்து வருகிறார். 

<a href=https://youtube.com/embed/VzxcpjG4dxA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/VzxcpjG4dxA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை மீண்டும் விமர்சித்து பேசிய சீமான், “உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள விஜய் உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்தது ஏன்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

8 கோடி மக்களோடுதான் என் கூட்டணி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மேலும் பேசிய சீமான், “ ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்தில் கட்சி தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியை விட விஜய் பெரிய தலைவரா? அவர்கள் கூட்டாத கூட்டத்தையாக விஜய் கூட்டிவிட்டார். விஜயால் எனது வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். நான் கார்த்திக் சிதம்பரத்தை போட்டிக்கு அழைக்கிறேன்.

ஒரே தொகுதியில் போட்டியிடுவோம். ஒரு ரூபாய் கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்க கூடாது. நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்று உள்ளேன். இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. 2026ம் ஆண்டு தேர்தல் முடிவில் நான் யார் என்று தெரியும்” என்றார். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!