undefined

“இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம்” - அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

 

'ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம்' என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், ஈரானின் மூத்த தலைவர் சயீத் அலி ஹொசைனி கமேனி வெளியிட்டஅறிக்கையில்: மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு, மத்தியில் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு உதவ வேண்டாம். அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும். இஸ்ரேலுக்கு உதவினால் நிலைமை மோசமாகும்” என்று கூறினார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!