undefined

உல்லாசத்திற்கு இடையூறு.. 1 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை!

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜா. எலக்ட்ரீசியனாக பணிபுரியும் இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதையடுத்து, அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை ராஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு பிரனிஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார். இந்நிலையில் தீபிகாவுக்கும், அவரது கணவரின் நண்பர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது.

ஆனால் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு அவரது கணவரும் குழந்தையும் தடையாக இருந்தனர். இதனால் கணவரையும், குழந்தையையும் கொல்ல தீபிகா முடிவு செய்தார். அதன்படி கடந்த 13-5-2019 அன்று இரவு தீபிகா தனது கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் கல்லை எறிந்து கொன்று, இரக்கமின்றி தனது ஒரு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், தீபிகா ஏரியின் அருகே குழி தோண்டி இருவரின் உடல்களையும் புதைத்துள்ளார். இதற்கு தீபிகாவின் கள்ளக்காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து, ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மூவாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அவரது கள்ளக்காதலர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!