செம.. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஊக்கத்தொகையுடன் இண்டர்ஷிப்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

 

தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை  அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து வரும் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு இண்டர்ன்ஷிப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பயிற்சிகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, அகப்பயிற்சி மேற்கொள்ளும் பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை  பள்ளி தலைமையாசிரியர்கள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதன்படி மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற் நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்கள்  குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான  www.tnemis.tn.schools.gov.in த்தில்  பதிவேற்றம் செய்யப்படும். இந்த தகவல்கள் அனைத்தும்  வட்டார வளமைய மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு,  ஊக்கத்தொகை  விடுவிக்கப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க