undefined

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை மூலம் தாக்குதல்.. எல்லைமீறும் ரஷ்யா!

 

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரில் ரஷ்யாவுக்கு உதவ வடகொரிய ராணுவப் படைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யா முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) போரில் பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ட்ரோப்ரோ நகரை குறிவைத்து ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து ஐ.சி.பி.எம். ரஷ்யாவின் அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கையை அனுப்புவதற்காக ரஷ்யா இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் 5,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும். இந்த நீண்ட தூர ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அணு ஆயுதம் இல்லாத ஆயுதத்தை பயன்படுத்தி ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு புதின் ஒப்புதல் அளித்த போதிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா ஏவியது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!