குண்டாக முடியல... விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம்!
துருக்கியில் வசித்து வருபவர் 26 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் குப்ரா அய்குட் . இவர் கடந்த ஆண்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். சமீபத்தில், அவர் தனது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உடலின் அருகில் கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குப்ரா அய்குட் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக வீடியோவில் தனது உடல் எடை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து மிகுந்த கவலையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தனது கடைசி வீடியோவில், “எனக்கு உடல் எடை அதிகரிப்பது மிகவும் சவாலாக உள்ளது. தற்போது எடை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், ஆனால் தினசரி எனது எடை ஒரு கிலோ குறைந்து கொண்டே வருகிறது” என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த உடல் எடை குறைபாட்டால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.தற்கொலைக்கான குறிப்பில், “நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் தான் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறேன். நான் இனி வாழ விரும்பவில்லை. செல்ல பிராணி ஃபிஸ்டிக்கை நன்றாகக் கவனித்துக்கொள்” என எழுதியிருந்தது.
அத்துடன் “என் வாழ்க்கையில் நான் எல்லோருக்கும் நல்லவளாகத் தான் இருந்தேன், ஆனால் என்னால் எனக்கு நல்லவனாக இருக்க முடியவில்லை. இந்த வாழ்க்கையில், சுயநலமாக இருங்கள். அந்த வழியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது தற்கொலை காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை, ஆனால் அவர் சமீப காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு பின் தற்கொலை செய்ததற்கான உண்மை தெரியவரலாம்.. இச்சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஃபாலோயர்ஸ் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!