undefined

காதலித்து கர்ப்பமாக்கிய இன்ஸ்டா காதலன்.. திருமணம் செய்யாமல் கம்பி நீட்டியதால் கதறும் இளம்பெண்!

 

திருச்சி பட்டவார்டு ரோடு ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் பால்பண்ணை விஸ்வாஷ் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.

அப்போது பொன்னையன் அந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை நேரில் அழைத்து பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்தால் அக்கம்பக்கத்தினர் தவறாக பேசுவார்கள் அதனால் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாக தெரிகிறது. இதை நம்பிய அனிதா கர்ப்பத்தை கலைத்தார்.

அதன் பிறகும் பொன்னையன் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் காதலன்  நம்பி போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதன்பிறகு, காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால, அவருடனான உறவை பொன்னையன் முறித்துக் கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் அளித்தார். பின்னர், கமிஷனர் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பொன்னையன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!