undefined

கி.பி 10ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.. வியக்க வைக்கும் தகவல்கள்!

 

வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 10ஆம் நூற்றாண்டின் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ண கண்ணரதேவாவின் 2 கல்வெட்டுகள் வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வள்ளிமலையில் கல்வெட்டுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக தொல்லியல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அதில், வள்ளிமலை கோவில் அருகே இரண்டு சிதிலமடைந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த கல்வெட்டுகளில், கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரகூட மன்னர் கன்னரதேவராயரின் வெற்றியை குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு, தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, வெற்றியின் அடையாளமாக உள்ளது. கண்டெடுக்கப்பட்ட முதல் இருமொழி கல்வெட்டு இது என கூறினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவின் பேரில் வருவாய்த் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கல்வெட்டை வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாளர் சரவணனிடம் ஒப்படைத்தனர். பின்னர், கல்வெட்டு பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வேலூர் அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், இந்த கல்வெட்டு 2011ம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோவில் அருகே கண்டெடுக்கப்பட்டு, அதன் பாதுகாப்புக்காக அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகளால் முருகன் சன்னதி அருகே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!