undefined

செம மாஸ் வீடியோ...   லடாக் எல்லை அமைதிப் பூங்காவாக மலர்கிறது... இரு நாட்டு படைகளும் பின்வாங்கல்! 

 

 
இந்தியா சீனா எல்லையில் கடந்த 4 ஆண்டுகளாக பதற்றநிலை நீடித்து வந்தது. தற்போது இந்த பதற்றநிலை  மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது.அதன்படி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை வாபஸ் பெற்று  வருகின்றனர்.
 இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் மீண்டும் ரோந்து பணிகளை மேற்கொள்ள இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில், டெப்சாங், டெம்சோக் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் பாதுகாப்பு படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.



அதே நேரத்தில், டெம்சோக்கில் இருந்து இந்திய வீரர்கள் சார்டிங் நாலாவின் மேற்குப் பகுதியை நோக்கி பின்வாங்குகிறார்கள், அதே நேரம் சீன வீரர்கள் நாலாவின் கிழக்குப் பகுதியை நோக்கி பின்வாங்குகிறார்கள்.
இதுவரை இருபுறமும் சுமார் 12 கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.  சீன இராணுவம் டெப்சாங்கில் கூடாரங்கள் அமைக்கவில்லை. ஆனால் அவர்கள் வாகனங்களுக்கு இடையில் தார்பாய் பயன்படுத்தி தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
சீன ராணுவம் அப்பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அதே போல்  இந்திய ராணுவமும் அங்கிருந்து சில வீரர்களை குறைத்துள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!