undefined

 இரும்பு பெண்மணி இந்திரா காந்தி பிறந்தநாள்!

 
 

இன்று இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தியின் 104வது பிறந்ததினம். இந்திரா 1917, நவம்பர் 19ல் பிறந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள். இவரது இளமை காலம் தாயன்பு கிடைக்காத சோகத்தினால் கட்டமைக்கப்பட்ட தனிமை குழந்தையாகவே வளர்ந்தார். 1942ல் ஃபெரோஸ் காந்தியை மணந்து அவரது தந்தைக்கு உதவியாக பணியாற்றினார்.


நேருவிற்கு பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். அவருக்கு பிறகு 1966ல் இந்திரா பிரதமராக பதவியேற்றார். இந்திய அரசியலை இந்திராவுக்கு முன், இந்திராவுக்கு பின் என இரண்டாக பிரிக்கும் அளவு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவரது ஆட்சி காலத்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை செயல்படுத்தியது காரணமாக சீக்கியர்களின் நிரந்தர எதிரியானார். இதனால் அவரது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.


இவரது ஆட்சியில் வங்கிகள் தேசியமயமாக்கல், பாகிஸ்தான் போர் வெற்றி, வெளிநாட்டு கொள்கை, வங்கதேச பிரிவினை, அணு ஆயுத திட்டங்கள், பசுமை புரட்சி என அடுக்கடுக்காக பல்வேறு சாதனைகளை செய்து முடித்தவர்.இந்திரா காந்தி சர்ச்சைக்குரிய தலைவராக அறியப்படுகிறார்.உண்மையில் ஆணாதிக்க சமுதாயம் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் வலுவான அதிகார பலத்துடன் மக்கள் தலைவராக நாட்டை வழிநடத்தியவர் என்றால் மிகையில்லை.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!