மைக்ரோசாப்ட் செயலிழப்பு: 200 விமானங்களை ரத்து செய்தது இண்டிகோ... பயணிகள் தவிப்பு!
200 விமானங்களை ரத்து செய்தது; மீண்டும் முன்பதிவு செய்வதற்கான அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் தற்காலிகமாக கிடைக்கவில்லை
மைக்ரோசாப்ட் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக இன்று ஜூலை 19 வெள்ளிக்கிழமை மற்றும் நாளையும் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம்ட் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஐடி செயலிழப்பை தொடர்ந்து இண்டிகோ 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. இது குறித்து இண்டிகோ நிறுவனம் மிகக் குறைந்த கட்டண விமான நிறுவனம், "எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உலகளாவிய பயண அமைப்பு செயலிழப்பின் அடுக்கு விளைவு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மீண்டும் முன்பதிவு செய்யும் அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம் தற்காலிகமாக எதுவும் செய்ய இயலாத சூழல் உருவாகியுள்ளது என கூறியுள்ளது. அத்துடன் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய செயலிழப்பை அடுத்து பல விமான நிறுவனங்கள் , விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அதன் பயணிகளை விமானத்தின் நிலையைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டது. ஆட்டோமேட்டிக் சிஸ்டம் செயலிழந்துள்ளதால் விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ்களை கையால் எழுதி வழங்கி கொண்டிருந்தன. இதனால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் தன்னுடைய X தளத்தில் “ தற்போது எங்கள் சேவை வழங்குனருடன் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்கிறோம், முன்பதிவு, செக்-இன் மற்றும் முன்பதிவு செயல்பாடுகளை நிர்வகித்தல் ஆன்லைன் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் கைமுறையாக செக்-இன் மற்றும் போர்டிங் செயல்முறைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
“வரவிருக்கும் பயணத் திட்டங்களைக் கொண்ட பயணிகளை எங்கள் கவுன்டர்களில் செக்-இன் செய்து முடிக்க வழக்கத்தை விட முன்னதாகவே விமான நிலையத்திற்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம்,