undefined

இந்தியாவின் மிகப்பெரிய ரோபோடிக்ஸ் போட்டி.. மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க!

 

இந்தியாவின் மிகப்பெரிய ரோபோடிக்ஸ் போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 05 ஆம் தேதி திருச்சியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இளம் தலைமுறையினர் சரியாக பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமையை மேம்படுத்த அவ்வப்போது போட்டிகள் நடத்துவது வழக்கம். 

அந்த வகையில், வரும் அக்டோபர் 05ஆம் தேதி  திருச்சியில் காலை 6 மணி முதல் மாலை 5 வரை தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக், சீசன் 3 போட்டி நடைபெற உள்ளது. இதில் ரோபோடிக்ஸ் பிரிவில் ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செல்போன் எண்களும், க்யூ ஆர் கோடும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவமாறு  போட்டியை நடத்தும் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிப்பெறுபவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படுகிறது. எனவே, இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணமா பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

செல்போன் எண்: 7540040071 / 7338900458

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!