undefined

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே பாதுகாப்பாக இருங்க... அவசர எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்!

 

இஸ்ரேலில் பதற்ற நிலை உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

இஸ்ரேலில் இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர கால தொலைப்பேசி எண்களையும் அறிவித்துள்ளது.

காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்றிரவு ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24/7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அறிவித்துள்ளது. மேலும் +972-547520711 +972-543278392 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றும், consi.telaviv@mea.gov.in என்கிற மின்னஞ்சல் வாயிலாகவும் தங்கள் நிலையை தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!