கனடாவில் வாடகை வீட்டில் குடியேற இந்தியர்களுக்கு பிரச்சனையே இல்லை.. பிரதமர் அறிவித்த சூப்பர் திட்டம்!

 

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கனேடாவில் வாடகை வீட்டில் குடியிருப்போர்களுக்கு ஒரு நல்ல செய்தி கூறியுள்ளார். இதன்படி குத்தகைதாரர் சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் குத்தகைதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கனேடிய மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

$2000 மாதாந்திர வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத பலன்கள் அடமான கடன் தவணை செலுத்துபவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரெடிட் புள்ளிகள் வாடகைதாரர்களுக்குக் கிடைக்காது. இளம் கனேடியர்கள் தங்களுடைய கடின உழைப்பை வாடகைக்கு செலவிடுவதாகவும், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த மசோதாவை பிரதம மந்திரி ட்ரூடோவின் பட்ஜெட் அடுத்த மாதம் ஏப்ரல் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளார். நியாயமற்ற முறையில் அதிகரித்து வரும் வாடகை மற்றும் மோசமான நில உரிமையாளர்களுக்கு எதிராக குத்தகைதாரர்களைப் பாதுகாக்க சட்ட உதவியும் வழங்கப்படும். சரியான நேரத்தில் வாடகை செலுத்துவதற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்படலாம். இந்த முடிவு கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பெரும்பாலான இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குடியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்