பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர்... பிரம்மோஸ் முன்னாள் பொறியாளருக்கு ஆயுள் தண்டனை!

 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த பரபரப்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்கு ஹனி-ட்ராப் நடவடிக்கையில் கசியவிட்டதாக நிஷாந்த் 2018ல் கைது செய்யப்பட்டார். அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை தவிர, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எம்.வி.தேஷ்பாண்டே அகர்வாலுக்கு ரூ.3,000 அபராதமும் விதித்தார். 2018ம் ஆண்டில், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் இராணுவ உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் கூட்டு நடவடிக்கையில் நிஷாந்தை கைது செய்தனர். அவர் ஐஎஸ்ஐக்கு தொழில்நுட்ப தகவல்களை கசியவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!