undefined

இன்று முதல் நாடு முழுவதும் கிலோ ரூ29க்கு பாரத் அரிசி... !

 

வெளிச்சந்தையில்  தரமான அரிசி விலை  கிலோ ரூ60க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சற்றே குறைந்தாலும் அடுத்த நாளே மீண்டும் உயர்ந்து விடுகிறது. இந்த திடீர் விலை  உயர்வால் சாமானிய நடுத்தர வர்க்கத்தினர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  கடந்த ஆண்டை விட அரிசியின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக  பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரிசியின் ஏற்ற இறக்கமாக இருந்து வரும்  நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு  முயற்சிகளை செய்து வருகிறது.  
 அதன் ஒரு பகுதியாக  பாரத் ரைஸ் என்ற பெயரில் குறைந்த விலையில் அரிசியை விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த அரிசி  ஒரு கிலோ  ரூ29க்கு கிடைக்கும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


  அதன்படி இந்த பாரத் அரிசி இன்று பிப்ரவரி 2 முதல் நாடு முழுவதும் விற்பனைக்கு வருகிறது. ஆனால் இந்த இந்திய அரிசி எங்கே கிடைக்கும்?  என்பது குறித்த தகவல்கள் இன்னும் விளக்கமாக வெளியிடப்படவில்லை.   பாரத் அரிசி மையங்களில் ஒரு கிலோ அரிசி ரூ29  க்கு விற்பனை செய்யப்படும்.  ஏற்கனவே பாரத் ஆட்டா, பாரத் தால் என்ற பெயரில் சலுகை விலையில் கோதுமை மாவு, பருப்பு வகைகளை விற்பனை செய்து வரும்  மத்திய அரசு, தற்போது அதே பாதையில் பாரத் அரிசியையும் கிடைக்கச் செய்துள்ளது. 


தற்போது பாரத் பிராண்டு கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், நிலக்கடலை கிலோ ரூ.60க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 2000க்கும்   மேற்பட்ட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பாரத் ஆட்டா, பாரத் தால் போல பாரத் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.  
இந்த பாரத் அரிசியை  வீடு வீடாக விற்பனை செய்வதற்கான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த உயர்ரக பாரத் அரிசியை கறுப்பு சந்தையில் விற்பனை செய்வது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டாலோ,  நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க