வீடு முழுக்க ரத்தம்... துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் மனைவி... இந்திய வம்சாவளி இளைஞர் வெறிச்செயல்!
அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டதாலும், மம்தா பணிக்கு வராததாலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆகஸ்ட் 22ம் தேதி நரேஷின் வீட்டில் சோதனை செய்த போது படுக்கை அறையிலும், பாத்ரூமிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த ரத்தக்கறை மம்தாவின் ரத்தத்துடன் ஒத்திருப்பது டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நரேஷை பிடித்து விசாரித்த போது மம்தா உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
மம்தா காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு நரேஷ் ஒரு கடைக்கு சென்று மூன்று கத்திகளை வாங்கியிருந்தார். இது குறித்து போலீசார் கேட்டபோது பிரிந்து செல்ல மட்டுமே முடிவு எடுத்தோம் என கூறியுள்ளார். நரேஷ் மம்தாவை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மறுமணம் செய்வதற்காக நரேஷ் தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மனைவியை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!