அமெரிக்க துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்!
உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸ் கணவரான ஜே.டிவான்ஸ் துணை அதிபராகிறார்.
அமெரிக்காவின் 47வது அதிபரானார் டொனால்டு டிரம்ப். 4 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அதிபரானார். வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் கிடைத்த பெருவாரியான வாக்குகள் டிரம்பின் வெற்றியை உறுதி செய்துள்ளது
அரசியலில் மீண்டும் வென்றது போலவே, பொருளாதார வலிமையிலும் அமெரிக்கா மீண்டும் வெற்றி பெறும் என்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்றும் ஜே.டிவான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!