undefined

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் மர்ம மரணம்... நாளை மறுதினம் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது!

 

 பால்கர் மாவட்டத்தின் தஹானு தாலுகாவில்   கோரட்பாடா குக்கிராமத்தில் வசித்து வருபவர்  கோல். இவர்  குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். இவர் பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 2022 அக்டோபரில் பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினர் இவரைக் கைது செய்தனர்.  இவர்  மார்ச் 8ம் தேதி குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கோயல் பக்கவாதத் தாக்குதலுக்கு ஆளாகி, சரிந்து விழுந்ததாக பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருக்கு  பாகிஸ்தான் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில்ல் அவர் சிகிச்சை பலனின்றி  உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


கோல் உயிரிழந்த தகவல் மார்ச் 17ம் தேதி  மற்ற இந்திய கைதிகளுக்கு  தெரிவிக்கப்பட்டது.  அத்துடன்  கோரட்பாடாவில் உள்ள கோலின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவரது மரணச் செய்தியை தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் உள்ளூர் எம்.எல்.ஏ.விடம் உதவி கோரினர். மத்திய அரசின் உதவியுடன் இதனை செய்து தருவதாக உள்ளூர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.  இந்திய அதிகாரிகள்  பாகிஸ்தானுடன்  தொடர்பு கொண்டு  கோலின் உடலை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுகோள் விடுத்தனர்.  
பாகிஸ்தானில் உள்ள கைதிகளுக்கு உதவும் சமூக அமைப்பின் பிரதிநிதியான ஜதின் தேசாய், கோலின் உடல் தஹானுவுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 29 ம் தேதி அமிர்தசரஸில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.  


கோலின் குடும்பத்தை அடையாளம் காண்பதில் இந்திய அரசு அதிகாரிகள்  சிரமங்களை எதிர்கொண்டனர்.  அவரது உறவினர்களை மகாராஷ்டிராவில் கண்டுபிடித்ததில் கோலுக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கோலின் வயது 57 என  அவரது ஆதார் அட்டை தெரிவிக்கின்றது.  ஆனால்  அவர் இறக்கும் போது அவருடைய வயது  45 தான் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.  மேலும், பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 300 மீனவர்களில், பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானுவைச் சேர்ந்த 5 பேர் உட்பட 35 பேர் ஏப்ரல் 30ம் தேதி விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!