undefined

அமெரிக்காவில் டிராக் பெஸ்ட் 2024 | இந்திய வீராங்கனை தீக்‌ஷா சாதனை... குவியும் வாழ்த்துக்கள்!

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிராக் பெஸ்ட் 2024  தடகள போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன இதில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில், அமெரிக்காவின் கிறிஸ்சி கியர் 4 நிமிடங்கள் 3.65 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட  தொலைவை கடந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த போட்டியில் கலந்து கொண்ட 25 வயதான இந்திய தடகள வீராங்கனை கே.எம். தீக்சா 1,500 மீட்டர் போட்டியில் 4 நிமிடங்கள் 4.78 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து 3வது இடத்தை  பிடித்து  புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

2021ல்  ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து இந்தியாவில் தேசிய சாதனையை படைத்திருந்தார். தற்போது அதனை தீக்சா முறியடித்து உள்ளார். 2023ல்  புவனேஸ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் தேசிய இன்டர்-ஸ்டேட் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், இறுதி போட்டியில் 4 நிமிடங்கள் 6.07 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்தது தான்  இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சாதனையாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் பெய்ன்ஸை வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டிப் பறித்தார்.  பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் நுழைவதற்கு, இந்த பிரிவில், 4 நிமிடங்கள் 2.50 வினாடிகளில் பந்தய தொலைவை கடக்க வேண்டும் என்பதே இலக்காக  நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!