8 வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று இந்தியா அபார வெற்றி!!

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட  6 அணிகள்  கலந்து கொண்ட   ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்   இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.  


51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான  இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை