7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. சுருண்ட வங்கதேசம்...!!

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையேயான போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்காளதேசம் அணியின் தொடக்க   வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இருவரும் 51 மற்றும்   66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹூசைன் மற்றும் மெஹிடி ஹாசன்  இருவரும்  8 மற்றும் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்  இழப்பிற்கு  256 ரன்களை குவித்தது. இதில் இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா  மூவரும் தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை  வீழ்த்தினர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும்   48 மற்றும் 53 ரன்கள் எடுத்தனர்.  

விராட் கோலி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.   ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.  கே.எல். ராகுல் சிறப்பாக ஆடினார்.  இந்திய அணி 41.3 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை குவித்து  வெற்றி பெற்றது. விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை அடிக்க, கே.எல். ராகுல் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!