undefined

பரப்பான சூழலில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ளும் இந்தியா.. வெற்றி கணக்கை தொடருமா..?

 
பரபரப்பான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியனை எதிர் கொள்கிறது. 

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களில் வங்காளதேசத்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுக்கு ஏற்ப குறைந்த வாய்ப்பே உள்ளது.