இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்.. ரசிகர்கள் உற்சாகம்!!

 

16 வது ஆசியக்கோப்பை போடிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இதில்  இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.  டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.  


தொடக்க ஆட்டக்காரர்களான   ரோகித் சர்மா மற்றும் நல்ல தொடக்கம்  தந்தார்கள். இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  கில் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
 விராட் கோஹ்லி 3, ரோஹித் சர்மா 53, கேஎல்.ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 5 ரன் எடுத்திருந்தனர்    பகுதி நேர பந்துவீச்சாளராக வந்த அசலங்கா, இஷான் கிஷான் 33, ரவீந்திர ஜடேஜா 4, ஜஸ்ப்ரீத் பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 என வெளியேறினர்.   இறுதி ஓவரில் தீக்சனா அக்சர் படேலை 26 ரன்களுக்கு வெளியேற்றினார். 49.1 ஓவரில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்கத்திலேயே   பதும் நிஷாங்க மற்றும் குசால் மெண்டிஸ் இருவரையும்   பும்ரா வெளியேற்றினார். சிராஜ் திமுத் கருணரத்னையை வெளியேற்றினார். பவர்பிளேவில் இலங்கை 3  விக்கெட்டுகளை இழந்தது.அடுத்தடுத்து   சதிரா 17, அசலங்கா 22 இவர்களை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.  அடுத்து வந்த கேப்டன் சனகாவை 9 ரன்களில்   ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். இலங்கை அணி 99 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்த நிலையில்   இந்தியாவின்   வெற்றி உறுதி செய்யப்பட்டது.  அடுத்ததாக ஜடேஜா தனஜெய டி சில்வாவை 41 ரன்களில் வெளியேற்றினார்.  

இதற்கு அடுத்து வந்த தீக்சனாவை 2 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ரஜிதா மற்றும் பதிரனா இருவரையும்  3  பந்துகளில் குல்தீப் யாதவ் வெளியேற்ற, இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 43 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2  விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் நல்ல ரன்ரேட் இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி தனது கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் செப்டம்பர் 15ம் தேதி விளையாட உள்ளது.  நாளை மறுநாள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை