அட்ரா சக்க.. மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன் டிராபியை தட்டி தூக்கிய இந்தியா!!
மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27முதல் ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் வெற்றி பெற்றன.
முதல் அரையிறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கொரியாவையும் வீழ்த்தியுள்ளது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் மோதியதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன் அதிரடி ரொக்கப்பரிசு அறிவிப்பையும் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜார்க்கண்ட் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ராஞ்சி 2023ல் வெற்றிபெற்ற அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ. 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.அத்துடன் அனைத்து துணை ஊழியர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!