undefined

ரீசார்ஜ் கட்டணம் உயர்வு: உலகிலேயே இந்தியாவில் தான் கட்டணம் குறைவு.. மத்திய அரசு விளக்கம்!

 

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது என்பது குறித்து நாட்டில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தகவல் தொடர்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) கட்டுப்பாட்டின் கீழ், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மொபைல் போன் சேவைகளுக்கான வாடிக்கையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகவும், உலகளவில் இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், 5G, 6G, Industrial IoT/M2M போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கும் நிதித் தேவை முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசின் மேம்பட்ட கொள்கைகள் காரணமாக  மொபைல் போன் சேவை கட்டணங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!