இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம்... மீனவர்கள் அறிவிப்பு!

 

ஜூலை 5ம் தேதி தமிழகத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 22 மீனவர்களைக் கைது செய்துள்ள நிலையில், நேற்று மீண்டும் 24 மீனவர்களைக் கைதுச் செய்துள்ளனர். கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.  ராமேஸ்வரம்: கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரையும், 4 விசைப்படகுகளை  இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!