நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!
நெல்லையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
2வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று 3வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது. காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், தொழில் வருமான விவரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கு, பணம் இருப்பு, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். 3வது நாளாக நடந்த இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!