undefined

இதிலேயுமா... இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்களில்  தமிழகம் தான் முதலிடம்..!!  

 

'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில்   இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையின்படி, 2022ல்   மட்டும் இந்தியா முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாலை விபத்துக்களில்   1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த  ஆண்டுடன் ஒப்பிடுகையில்   விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 


அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது ஆகியவை   இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளது. சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் தான்  தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.  2022ல் தமிழகத்தில் மட்டும்  64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018  முதல் 2021  வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.  2022ம் ஆண்டைப் பொறுத்தவரை 2வது இடத்தில் மத்தியப் பிரதேசமும், 3வது இடத்தில் கேரளாவும், 4 வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் உள்ளன.


 சாலை விபத்துக்களை தடுக்க  வலுவான நடவடிக்கைகளை அமல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. இதன்படி  “இந்தியாவில் சாலை விபத்துகள்-2022” என்ற இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   இது சாலை விபத்துக்களுக்கான காரணங்கள்   ஆழமான நுண்ணறிவுகளை வழங்குவதாகவும், வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் அமைச்சகத்தின் சாலைப் பாதுகாப்பு முன்முயற்சிகள் குறித்தும் இந்த அறிக்கை தகவல்களை வழங்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!