இஸ்ரேல் தாக்குதலில்.. 100க்கும் பேர் பட்டோர் உயிரிழப்பு; 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதில் குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தைகள், பெண்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உட்பட தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் நேற்று காலை முதல் எதிரிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்."
ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா போராளிக் குழு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை உடனடியாக காலி செய்யுமாறு பொதுமக்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்ததால், இஸ்ரேல் இன்று லெபனானில் பல பகுதிகளில் குண்டுகளை வீசியது. லெபனான் அதிகாரிகளின் கூற்றுப்படி, 80,000 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான இஸ்ரேலிய வாக்கி டாக்கிகள் நகரங்களை காலி செய்யும்படி மக்களைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஒகேரோவின் தலைமை நிர்வாக அதிகாரி இமாத் ரீடே இந்த தகவலை உறுதி செய்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸுக்கு ஆதரவாக களம் இறங்கியது. இதனால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வலதுகரமாக இருந்த பௌவாட் ஷுகார் கொல்லப்பட்டதன் மூலம் மோதல் மேலும் தீவிரமடைந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப்படை தளபதிகளான ‘ரத்வான்’ இப்ராகிம் அகீல், அகமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பெய்ரூட்டில் 2006 இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போருக்குப் பிறகு நடந்த தாக்குதல் மிக மோசமானதாக கருதப்படுகிறது.
இஸ்ரேலிய வான் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சர் பிராஸ் அபைடு தெரிவித்தார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் ஜெஸ்ரி பள்ளத்தாக்கின் வடக்கு நகரங்களை நோக்கி ஹிஸ்புல்லா 10 ஏவுகணைகளை வீசியது பெரும் பீதியைக் கிளப்பியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!