விவசாயி கொலை விவகாரம்.. தந்தை மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை..!

 

கடலூர் அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்களம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் மார்ஷல் டிட்டோ (27), அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் தேவநாதன்.

இந்நிலையில் மார்ஷல் டிட்டோவுக்கும், தேவநாதனுக்கும் மாட்டு வண்டி ஓட்டுவது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தேவநாதன் தனது தந்தை சக்திவேலிடம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 18.9.2016 அன்று மார்ஷல் டிட்டோவும், கிருஸ்துராஜும் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த   சக்திவேல் (53),  பாலுமகேந்திரன் (29),   சண்முகம் (54),  ராஜீவ் காந்தி (36) ஆகியோர் மாட்டு வண்டியை மறித்து அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் கிறிஸ்துராஜ், மார்சல் டிட்டோ ஆகியோரை தடி மற்றும் இரும்பு பைப்பால் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த கிறிஸ்துராஜ், புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பாலுமகேந்திரன், சண்முகம், ராஜீவ்காந்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கடலூர் மாவட்ட முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பு கூறினார்.அவரது தீர்ப்பில் சக்திவேல், பாலு மகேந்திரன், சண்முகம், ராஜீவ் காந்தி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜரானார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற சண்முகனும், பாலு மகேந்திரனும் தந்தையும் மகனும் ஆவர். அதேபோல் சண்முகமும் சக்தியும் சகோதரர்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்