குடல்வால் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழப்பு.. கதறும் பெற்றோர்கள்.!

 

மயிலாடுதுறையில்  குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் விவகாரத்தில் உரிய விசாரணை செய்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்  புகார் மனு அளித்தனர். மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் கிஷோர் என்ற மாணவனுக்கு வயிற்றுவலி காரணமாக கடந்த 29ம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல்வால்  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிரிழந்தார்.

மருத்துவர்கள்  சிறுவனின்  வயதைக் கருத்தில் கொள்ளாமல் உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டதாகவும்,  தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி சாலைமறியலில் ஈடுபட்டனர்சிறுவனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வழங்காமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய நிலையில்,   மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் கிஷோரின் உயிரிழப்பிற்கு காரணமான அருண்பிரியா மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்து கோரிக்கை விடுத்தனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும்,  மாவட்ட ஆட்சியர் ஒருவரை மட்டுமே முழுமையாக நம்புவதாகவும் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க