இம்ரான் கான் கட்சி அலுவலகம் சீல்.. அகற்ற கோரி நீதிமன்றம் உத்தரவு!

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட ‘சிபார்’ வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் இருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

இது இம்ரான் கானுக்கு சற்று ஆறுதல் கொடுத்துள்ளது. இருப்பினும், வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதால், அவர் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பில்லை இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி பி.டி.ஐ. அலுவலகம் தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தால் சோதனையிடப்பட்டது. சோதனையின் முடிவில், சட்டத்தை மீறியதாகக் கூறி, கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பிடிஐ எதிர்ப்பு தெரிவித்தது. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!