undefined

முக்கிய அறிவிப்பு... இன்று முதல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 ரயில்கள் ரத்து!

 

மின்சார ரயிலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்பவர்கள், தினந்தோறும் மின்சார ரயிலில் பயணிப்பவர்கள் மறந்துடாதீங்க. இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வரையில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரு மார்க்கத்திலும் இன்று முதல் 14 ரயில்கள் என மொத்தமாக 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் வழக்கமான பயண நேரத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க. 

இன்று நவம்பர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று நவம்பர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 14 மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

வார நாட்களை பொறுத்தவரை அதாவது  திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


அதேபோல், வார நாள்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செங்கல்பட்டு - தாம்பரம்- சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மின்சார ரயில்களை பணி மற்றும் மாணவர்கள் இதனை குறித்து கொண்டு அதற்கேற்றபடி தங்களது பயணங்களை திட்டமிட்டுக்கொள்ள தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!