undefined

வாகன ஓட்டிகளே உஷார்... சிக்னல்களில்  ஒலி மாசு அதிகரித்தால் உடனடி தண்டனை..!

 

 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒலிமாசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாகவும் வாகனங்களில் இருந்து அதிக ஒலி சத்தம் வந்தால் உடனடியாக வாகன ஒட்டிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலால் வாகன ஓட்டிகள் பரபரப்பும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.  


ஹாங்காங் போன்ற வெளிநாட்டில் உள்ள சிக்னல்களில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட்டு வாகனங்களின் ஒலி சத்தம் அளவிடப்படுகிறது. அந்த வகையில் சென்னையிலும் அதே போன்று சிக்கனலில் டெசிபல் மீட்டர் பொருத்தப்பட இருப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சத்தம் வாகனங்களில் இருந்து வெளிவந்தால் சிக்னலில் சிவப்பு விளக்கு மட்டுமே எரியும் வகையில் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் வாகனங்களில் ஒலி அளவு அதிகமாக இருப்பதை கண்டுபிடிக்க  போக்குவரத்து காவலர்களுக்கு இயர் பிளக் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த சிக்னலில் தண்டனை என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களில் உள்ள ஒலி சத்தத்தை சோதனை செய்து கொள்ள வேண்டும் என  அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை