undefined

’நான் ஆரோக்கியமாக உள்ளேன்’.. விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தகவல்!

 

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல மாதங்களாக தவித்து வருகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் எட்டு நாட்களில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும், ஆனால் 150 நாட்களுக்கு மேல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் நாசா வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சுனிதா வில்லியம்ஸ்  எலும்பு தோலுமாக விண்வெளியில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பிறகு விண்வெளியில் நீண்ட நேரம் தங்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் உடல்நிலை குறித்து பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார். மேலும் முன்பை விட தற்போது தான் ஆரோக்கியமாக உள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில், நாசா செய்தி தொடர்பாளர் ஜிம்மி ரஸ்ஸல் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து நாசா விண்வெளி வீரர்களும் வழக்கமான மருத்துவ மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள விமான அறுவை சிகிச்சை நிபுணர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அது கூறியது. அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!