undefined

’செருப்பால் அடிப்பேன் நாயே’ அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம்.. பொங்கிய சனம் ஷெட்டி!

 

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு நடிகை சனம் ஷெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சனம் ஷெட்டி, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்  மிகவும் கஷ்டமாக உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண் குழந்தைகளை வெளியே செல்லக்கூடாது, அப்படிப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது, யாரையும் நம்பக்கூடாது என்று சொல்லித்தான் வளர்க்கிறோம். இதை எவ்வளவு காலம் சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். குடும்பத்திற்குள் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.மேலும், பேசிய அவர் மலையாள திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதற்காக ஹேமாவுக்கும், கேரள அரசுக்கும் நன்றி. தமிழ் சினிமா உலகில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று யாரும் சொல்ல முடியாது. என் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் சம்பவங்கள் நடந்தது. ஆனால் இதை ஏன் அன்று சொல்லவில்லை என்று சொல்வார்கள். அந்த  நேரத்தில், அட்ஜஸ்ட் கேட்டவரிடம் செருப்பால் அடிப்பேன் நாயே என்று கூறி போனை கட் செய்த சம்பவங்கள் கூட நடந்துள்ளதாகவும், அதன் பிறகு அந்த ப்ராஜெக்டை கூட சம்மதிக்கவில்லை என்றும் சனம் ஷெட்டி கூறியிருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!