காய்ச்சல் வந்தா அலட்சியப்படுத்தாதீங்க... நிரம்பி வழியும் மருத்துவமனை வார்டுகள்...!!

 

தமிழகத்தில் ஒரு புறம் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மறுபுறம் அதிவேகமாக டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி தமிழக எல்லைப்பகுதி மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அந்த வகையில் கோவையில் தினசரி 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற புறநோயாளிகளாக வருகின்றனர். இதனையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தமிழகம் முழுவதுமே தற்போது பருவ மழையால் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.    இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.  


அதனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சமயங்களில் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என மருத்துவர் அவர்களுக்கும் அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமே.  மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம். முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  


சாதாரணமாக காய்ச்சல்  வந்தால்  2 அல்லது 3  நாட்களில் சரியாகிவிட வேண்டும். எதிர்ப்பு சக்தியால் வரும் காய்ச்சல் எனில்  பயப்படத் தேவையில்லை. கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால்  உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  
காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கோவை அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காய்ச்சலை பொறுத்தவரை சாதாரணமாக 60 பேர் புற நோயாளிகளாக வருகின்றனர். அவர்களை கண்காணிக்க மருத்துவர்களும் உள்ளனர். மக்கள் எப்போதும் நீரை கொதிக்க வைத்து பருகுங்கள் எனவும், மழையில் அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!