undefined

 திருவண்ணாமலையில் சாமியார்களுக்கு அடையாள அட்டை... மாவட்ட நிர்வாகம் அதிரடி!

 

 திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.  

அதே நேரத்தில் கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா போன்ற  போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்து வருகின்றன. இதனையடுத்த் சாதுக்களுக்கு கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த கிரிவலப்பாதையில் மட்டும்  சுமார் 300க்கும் மேற்பட்ட சாமியார்கள் காவல்துறையினரிடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்த  விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் கூறுவது சரியாக உள்ளதா என விசாரணை செய்து சரியான விவரங்கள் கொடுத்த சாமியார்களுக்கு புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!