undefined

’சி.எம் வீட்டுக்கு போகணும்’.. குடிபோதையில் இளம்பெண் அட்ராசிட்டி.. செய்வதறியாது தவித்த போலீஸ்!

 

ஆண்களைப் போலவே பெண்களும் குடிபோதையில் அட்டூழியங்களைச் செய்கிறார்கள். சென்னையில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று பார்த்தால், இப்போது கரூரில் அது நடந்துள்ளது.

கரூரில் பெண் ஒருவர் குடிபோதையில் மெயின் ரோட்டில் அமர்ந்து குடிபோதையில்  பேசி போலீசாரை துஷ்பிரயோகம் செய்தார். தான் சென்னையில் பணிபுரிவதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்வதாகவும் கூறி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினின் முகவரி தெரியவில்லை என்றும், தன்னை ஏமாற்றியவனை கைது செய்யுமாறும் என்றும் அந்த பெண் போலீசாரிடம்  கோரிக்கை விடுத்தார்.

 தன்னை பார்த்தவர்களை வசை பாடிய அந்த பெண்... “இங்கிருந்து போ என்று அவர்களை விரட்டினார். இறுதியாக அந்த பெண்ணை பிடித்து ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிபோதையில் உள்ளவர்களின் அட்டூழியங்களால் அதிக சிரமத்தை அனுபவிப்பது காவல்துறையினரே என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!