ஒரு வழியா சொல்லிட்டாங்க.. திருமண தேதியை அறிவித்த சின்னத்திரை ஜோடி!
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற முன்னணி சீரியல் உள்ளது. இந்த சீரியலில் வெற்றி வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான இவர் சினிமாவில் நடிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளார். தன்னால் இயன்றதை எல்லாம் செய்து வந்த வெற்றி வசந்துக்கு முதல்முறையாக சிறகடிக்க ஆசை மூலம் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலேயே இவருக்கு பெரும் புகழ் கிடைத்தது.
சிறகடிக்க ஆசை படத்தில் சாமானியர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடித்துள்ளார். அதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முத்துவுக்கும் மீனாவுக்கும் இணையத்திலும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் வெற்றி வசந்த் தனது காதல் கதையை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இவர் விஜய் டிவியின் பிரபல நடிகை வைஷ்ணவியை காதலித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் இணைந்து நடித்த பல நடிகர், நடிகைகள் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் வரிசையில் இந்த ஜோடியும் உள்ளது. பொன்னி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்த வெற்றி வசந்த், அதுவும் அந்த சீரியலில் பொன்னிக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பிறகு இரண்டே மாதத்தில் காதலித்து நிச்சயம் செய்து கொண்டனர்.
அவர்களது நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடந்தது. அப்போது திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் திங்கட்கிழமை அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் வரப் போகிறது. அதே சமயம் இவர்களது திருமண செய்தி வெளியானதும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!