undefined

’அவசரமா போன் பேசணும்’.. பேசுவது போல் நடித்து போனை ஆட்டைய போட்ட இளைஞர்!

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் வைக்கோல் வியாபாரி. இவர் கடந்த 23ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள பணப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு வைக்கோல் வாங்கி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர் ஒருவர் அவசரமாக ஒருவரிடம் பேச வேண்டும் என்று கூறி செல்போனை கேட்டுள்ளார்.

பிரபு அவரிடம் செல்போனை கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபர் யாரிடமோ செல்போனில் பேசுவது போல் நடித்து திடீரென அங்கிருந்து ஓடினார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்றிரவு அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, ​​அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த இளைஞரை பிடித்தனர்.

அதில் அவர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளனூரைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பதும், பிரபுவிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!