இந்த தேசத்திற்காக எல்லாம் செஞ்சுட்டேன்.. மேடையில் கண் கலங்கிய ஜோ பைடன்!
இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். மறுபுறம், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்டபோது, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவரது சமீபத்திய உடல்நலக் குறைவு மற்றும் ஊடக நேர்காணல்களில் அவரது நடத்தை போன்ற விமர்சனங்களுக்கு மத்தியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராவார் என தற்போதைய ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாளில் (நேற்று) நிரம்பிய பார்வையாளர்களிடையே பைடன் உரையாற்றினார். அவர் தனது உரையில், 2020 மற்றும் 2024 ஜனாதிபதித் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின் போது அவர் எழுப்பிய பிரச்சினைகள் மற்றும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசினார். "உங்களில் பலரைப் போலவே நானும் இந்த தேசத்திற்காக என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்துள்ளேன்" என்று அவர் கூறினார். ஏறக்குறைய ஒரு மணிநேரம் நீடித்த அவரது உரையின் முடிவில், "நன்றி, ஜோ" என்ற பைடனுக்கு ஆதரவான கோஷங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்தன.
அதையடுத்து, நான் ஜனாதிபதி வேட்பாளராக ஆனவுடன் எடுத்த முதல் முடிவுகளில் கமலாவை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தேன். அது மட்டுமின்றி எனது அரசியல் பயணத்தில் நான் எடுத்த சிறந்த முடிவு இது. கமலா மிகவும் தைரியமான மற்றும் அனுபவம் வாய்ந்த பெண். அவரிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உள்ளது. என்றும் கூறினார். மேடையில் ஏறிய பிறகு, பைடன் தனது மகள் ஆஷ்லியைக் கட்டிப்பிடித்து, அவள் கண்களில் இருந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து பேசிய, கமலா ஹரிஷ், "ஜோ, உங்கள் வரலாற்றுத் தலைமைக்கும், உங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் தேசத்திற்கு சேவை செய்ததற்கும், நீங்கள் தொடர்ந்து செய்யும் அனைத்திற்கும் நன்றி. நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்று கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!