undefined

எனக்கு இந்தியர்களை பிடிக்கல.. அவங்க மீது குண்டு வீச போறேன்.. பகீர் கிளப்பிய பிரிட்டன் யூடியூபர்!

 

பிரிட்டன் யூடியூபர் மைல்ஸ் ரூட்லெட்ஜ், 'நான் பிரிட்டனின் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்' என்று கூறி சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அணுகுண்டுகளை வீசப் போவதாக பிரிட்டனைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் கூறியுள்ளார். அந்த நாட்டைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்பவர் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பிரிட்டன் பிரதமரானால், பிரித்தானிய நலன்களுக்கு இடையூறு செய்யும் எந்த வெளிநாட்டு சக்தியையும் வெளிப்படையாக எச்சரிப்பேன். சம்பந்தப்பட்ட நாடுகள் மீது அணுகுண்டுகளை வீசுவேன். நான் பெரிய மீறல்களைப் பற்றி பேசவில்லை. நம் நாட்டிற்கு சிறிதளவு தொந்தரவு கொடுத்தாலும் அணுகுண்டு வீசுவேன் என்று கூறியிருந்தார்.

மேலும், அவர் பிரதமரானால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. எனக்கு இந்தியா உண்மையில் பிடிக்கவில்லை. இந்தியனை நெருங்கும் போது உணர முடிகிறது..  இந்தியர் அவ்வளவு தான் என மிக மோசமான இனவாத கருத்துக்களை கூறியுள்ளார். ஆனால், சில நெட்டிசன்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூறிய அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை