undefined

அதிர்ச்சி...  மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரால் குத்திய கணவர்!

 

  சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை  வண்டிக்காரன் நகரில் வசித்து வருபவர்  மணிகண்டன். இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உண்டு.  இந்நிலையில்  கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டுப் பிரிந்த பிருந்தா, கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல்லில் தனியாக வசித்து வந்து உள்ளார். அதேநேரம், தம்பதியின் இரு பிள்ளைகளும் தந்தையிடம் தான் வளர்ந்து வந்தன.  

வேலை காரணமாக, சேலத்தில் இருந்து நாமக்கலுக்கு மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில்  நாமக்கல் மோகனூர் சாலையில் பிருந்தா வேறு ஒரு நபர் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனைப் பார்த்த மணிகண்டன், உடனடியாக பிருந்தா சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தினார்.  


அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்து இருந்த ஸ்குருடிரைவரை எடுத்து, பிரிந்தாவின் தலையில் இறக்கி உள்ளார். இதனால் வலியால் துடித்த பிருந்தா சாலையில் சரிந்து விழுந்தார்.  அக்கம் பக்கத்தினர் வந்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து  மணிகண்டனை  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!