கதறிய இளம்பெண்... நிர்வாண பூஜைக்கு வற்புறுத்திய கணவர்.. நண்பனால் வந்த விபரீதம்!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாமரசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை போக்க பரிகார பூஜை செய்ய கணவர் வற்புறுத்துவதாகவும், பரிகார பூஜை செய்யுமாறு தனது கணவரிடம் பிரகாசன் என்பவர் தொடர்ந்து கூறி வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாண பூஜைக்கு ஒத்துழைக்குமாறு கணவர் வற்புறுத்துவதாகவும், பரிகார பூஜைக்கு சம்மதிக்குமாறு வற்புறுத்துவதாகவும் அந்த இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தாமரசேரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரகாசன் பெண்ணின் குடும்பத்தினரிடம் நிர்வாண பூஜை செய்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது தெரியவந்தது.
இதற்கு இளம்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவரையும், பூஜைக்கு தூண்டிய பிரகாசனையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததும் வீட்டில் தகராறு ஏற்பட்டது.
அதே சமயம் என் கணவரின் நண்பன் பிரகாசன் வீட்டிற்கு வந்து ஒரு சிறிய குடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து ரத்தம் போல் இருப்பதை காட்டினார். ஆனால் அந்தத் தண்ணீரில் சிவப்புப் பொடியைக் கலப்பதைப் பார்த்தேன். என் கணவருக்கு பிரம்ம ராட்சசனை பிடிக்கும் என்று கூறிய பிரகாஷ், எனக்கு வாதை பிடித்திருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவும் நிர்வாண பூஜைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பல இடங்களில் நிர்வாண பூஜை நடத்தப்பட்டதாகவும் பிரகாசன் கூறியிருந்தார். தனக்கு தொடர்ந்து தொல்லைகள் அதிகரித்து வருவதால், போலீசில் புகார் அளித்ததாகவும், தனது கணவரும், அவரது நண்பர் பிரகாசனும் சிறையில் இருந்து வெளியே வந்தால், எனக்கு மிரட்டல் விடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். எனவே, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா