undefined

 மொபைலில் பேசிய மனைவியை அரிவாளால் கையை வெட்டிய கணவர்!

 

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்  சேகர்-ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு  3 பெண் குழந்தைகள். இதில் 2 மகள்களுக்கு  திருமணமாகி விட்டது.  கடந்த சில நாட்களாகவே ரேவதி எந்நேரமும் போனும் கையுமாகவே இருந்து வந்தார். அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்டும், வீடியோ காலில் பேசியும் வந்துள்ளார்.

மொபைலில் பேசுவதை குறைக்க சொல்லி  கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது . சம்பவ தினத்தன்று  ரேவதி மீண்டும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது கணவர்  சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிலுக்கு பதில் பேசிக்கொண்டிருந்த ரேவதியை ஆத்திரத்தில் சேகர்  வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையை வெட்டினார்.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த ரேவதி அலறித் துடித்தார். இவருடைய கூச்சலைக் கேட்டு  ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்  சேகரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ காலில் பேசிய மனைவியின் கையை கணவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!