undefined

”என் குழந்தைக்கு நெய்மர் தான் அப்பா”.. மாடல் அழகி பகீர் குற்றச்சாட்டு..!

 

நட்சத்திர கால்பந்து வீரர்களில், மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அதிகம் பிரபலமானவர் நெய்மர். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். கோல் அடித்த பிறகு களத்தில் தனது தந்திரங்களுக்கு பெயர் பெற்றவர். மைதானத்தில் அவர் அடித்த பந்து கூட வைரலானது.

இந்நிலையில், தனது 10 வயது குழந்தைக்கு நெய்மர் தான் தந்தை என ஹங்கேரி நாட்டு மாடல் அழகி கேப்ரியல்லா காஸ்பர் தெரிவித்துள்ளார். பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் கேப்ரியல்லா வழக்கு தொடர்ந்தார். அதில், கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு பொலிவியாவில் தேசிய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை சந்தித்ததாக கேப்ரியல்லா கூறினார். மேலும் குழந்தையின் தந்தையை நிரூபிக்க டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் குழந்தையை தனியாக 10 வருடங்கள் வளர்த்ததற்காக மாதம் 32,500 டாலர் ஜீவனாம்சம் மற்றும் 20 மில்லியன் டாலர் கேட்டுள்ளார்.



அவர் தனது குழந்தையின் பெயர் ஜாஸ்மின் ஜோ என்றும், நெய்மரை எப்போதும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அவரை நேரில் சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனது மகளுக்கு நெய்மரின் தாய் மற்றும் சகோதரியின் முக அம்சங்கள் இருப்பதாகவும் கேப்ரியல்லா கூறியுள்ளார். இது வரை நெய்மர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க