undefined

 உங்கள் நட்சத்திரத்திற்கேற்ப பிள்ளையாரை எப்படி வழிபட்டால் முழு பலன்கள் கிடைக்கும்?!

 
 

முழு முதற்கடவுளான விநாயகரை எல்லோரும், எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். எப்படி வழிபட்டாலும் முழு அருளையும் தந்து, நம்மைக் காப்பவர் விநாயகர். உங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கேற்ப தேர்ந்தெடுத்து வழிபட்டால் அதிர்ஷ்டமும், செல்வமும் உங்கள் இல்லத்தில் நிலையாக குடிபுகும். 

உங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ப விநாயகரை எப்படி வழிபாட வேண்டும் என்றும், எப்படி வழிபட்டால் முழுமையான பலன்களைப் பெறலாம் என்றும் பார்க்கலாம் வாங்க.

1.மேஷம், கடகம், துலாம், மகரம்:

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும் நிவேதனமாக படைத்து விநாயகரை வழிபடலாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகம் நைவேத்தியம் செய்து விநாயகரை வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப் பயிறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். 

மேற்கூறிய மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்னங்கள் உதிக்க  பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய்க்கிழமைகளிலும், சனிக் கிழமைகளிலும் தேங்காய் உடைத்து செவ்வரளிப் பூக்கள் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். 

இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

2. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய்  உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளை அரளி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய்  உடைத்து, மல்லிகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை