undefined

உஷார்!! நாளை இவற்றிற்கு எல்லாம் தடை!! சென்னை மாநகராட்சி அதிரடி!!

சென்னையில் போகி பண்டிகைக்கான விதிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அன்றைய நாளில் நெகிழி, டயர்களை எரிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே துவங்கியுள்ளன. தமிழ் மாதம் மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். 

அன்றைய நாளில் வீட்டில் சேகரிக்கப்பட்டுள்ள பழையப் பொருட்களை போகி பண்டிகை நாளின் அதிகாலை நேரத்தில் மக்கள் தீ வைத்து கொளுத்துவார்கள். ஆந்திராவை ஒட்டியுள்ள மாநிலங்களில் போகி விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.

தமிழகத்தில் சென்னையில் போகி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய நாளில் டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிக்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் 15 மண்டலங்களுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு காலங்களிலும் இதேபோன்ற உத்தரவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.